Athisayamana Olimaya Naadam - அதிசயமான ஒளிமய நாடாம்



அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் – நான் வாஞ்சிக்கும் நாடாம் - என் (2)

1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா - அல்லேலூயா - அதி

2. வித விதக் கொள்கையில்லை
பலப் பிரிவுள்ள பலகை இல்லை
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் - அன்புள்ளோர் செல்லும் - அதி

3. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை - அன்பே மொழி - அதி

4. இயேசுவின் இரத்தத்தினால்
பாவம் கழுவினால் செல்லலாமே
இத்தனைப் பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர் - அதி


Song Description: Tamil Christian Song Lyrics, Athisayamana Olimaya Naadam, அதிசயமான ஒளிமய நாடாம்.
KeyWords: Emil Jebasingh, Old Tamil Christian Song Lyrics, Athisayamaana Ozhimaya Naadam Song Lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.