Appa Appa - அப்பா அப்பா
அப்பா அப்பா உங்க மடியில
பிள்ளையாக சாய்ந்து உறங்கணும் - 2

தேற்றிடுவீர் அணைத்திடுவீர்
அப்பா உம் அன்பினாலே - 2
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உமக்காக வாழ்ந்திடுவேன் - 2
                          - அப்பா அப்பா

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும் ஒருபோதும் கைவிடமாட்டீர் - 2
கரங்களை பிடித்து துணையாய் வந்தீர் - 2
தடுமாற விடமாட்டீர் நீர்
தடுமாற விடமாட்டீர்
                          - அப்பா அப்பா

மலைபோன்ற சோதனைகள்
என்னை நெருங்கினாலும்
பனிபோல மாற்றிடும் என் இயேசுவே - 2
நான் கூப்பிடும்போது
துணையாய் வந்தீர் - 2
என் சூழ்நிலையை மாற்றிவிட்டீரே - 2
                          - அப்பா அப்பா

எதிரிகள் என்னை தாக்கினாலும்
நான் நேசிப்போர் என்னை தள்ளி விட்டாலும் - 2
பாதம் கல்லில் மோதிடாமல் - 2
கண்மணிபோல் காத்திடுவார் - 2
                          - அப்பா அப்பா


Song Description: Tamil Christian Song Lyrics, Appa Appa, அப்பா அப்பா.
Keywords: Varsha Renjith, A.J. Ministry, Aaron John, Appa Appa Unga Madiyila.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.