Abishega Naatha - அபிஷேக நாதா
அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா
ஆரூயிர் அன்பரே
1. அன்னிய பாஷைகள்
இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட
என்மேல் வாருமே - அபிஷேக நாதா
2. ரகசியம் பேசிட
கிருபை தாருமே
சத்திய ஆவியாய்
என்மேல் வாருமே - அபிஷேக நாதா
3. தேசத்தைக் கலக்கிட
திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட
பெலனாய் வாருமே - அபிஷேக நாதா
4. பரிந்து பேசிட
ஆத்ம பாரம் தாருமே
பரிசுத்தமாகிட
தினம் என்மேல் வாருமே - அபிஷேக நாதா
5. சாத்தானை ஜெயித்திட
சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட
என்மேல் வாருமே - அபிஷேக நாதா
6. அக்கினி அபிஷேகம்
இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க
என்மேல் வாருமே - அபிஷேக நாதா
Songs Description: Tamil Christian Song Lyrics, Abishega Naatha, அபிஷேக நாதா.
KeyWords: Paul Thangiah, Abishega Naathaa, Tamil Christian Songs, Abisheha Naatha.
KeyWords: Paul Thangiah, Abishega Naathaa, Tamil Christian Songs, Abisheha Naatha.