Stephen's Testimony - ஸ்தேவானின் இரத்த சாட்சி
ஸ்தேவானின் இரத்த சாட்சி
இரத்த சாட்சியாக மரித்த ஸ்தேவான் எருசலேமில் வாழ்ந்தவர். இவரது பெயரின் அர்த்தம் "கிரீடம்" புதியேற்பாட்டு சபையில் சீசர்கள் பெருகிய போது கிரேக்கரானவர்களின் விதவைகள் சரியாக விசாரிக்கபடாதமையினால் சபையில் குழப்பம் ஏற்படலாயிற்று.
எனவே அப்போஸ்தலர்கள், சபையார் கூடி ஒரு தீர்மானத்துக்கு வருகிறார்கள். மக்களை விசாரிப்பதற்காக பரிசுத்தாவியும், ஞானமும் நிறைந்து நற்சாட்சி பெற்று இருந்த விசுவாசிகளை தெரிவு செய்து விசாரிப்பின் ஆறுதல் பணிக்காக ஏழுபேரில் ஒருவனாக ஸ்தேவானும் தெரிவு செய்யப்பட்டார்.
இவரது பணியில் நாளடைவில் விசுவாசத்திலும், வல்லமையினாலும் நிறைந்தவராய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புத அடையாளங்களையும் செய்தார்.
அவன் பேசிய ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க முடியாமல். அங்கே இருந்த சில கூட்டங்கள் மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக பேசுகின்றான், தூஷண வார்த்தைகளை பேசுகின்றான் என்று சில மனுசரை ஏற்படுத்தி ஜனங்களையும், வேதபாரகரையும் எழுப்பி விட்டு அவன் மேல் பாய்ந்து அவனைப்பிடித்து ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக நிறுத்தி, ஓயாமல் குற்றப்படுத்தும் போது பிரதான ஆசாரியன் அவனை நோக்கி காரியம் இப்படியிருக்கிறதா? என என்று கேட்ட பொழுது, அவர்கள் முன்பாகவும் ஆபிரகாம் முதல் இயேசுவரை தெளிவான செய்தி ஒன்றை கொடுப்பதை காணலாம்.
அவ்விடத்தில் அவர்கள் செய்த பாவங்கள் யாவையும் பயப்படாமல் கூறும் தைரியம் கொண்டவராய் ஸ்தேவான் காணப்பட்டார். இதைக்காது கொண்டு கேட்க்க முடியாதவர்களாய் மூர்க்கத்தனமாய் கற்களை எறிந்தனர். அந்த நிலையிலும் அவர்களின் மேல் தேவன் கோபம் கொள்ளாமல் குற்றத்தை சுமத்தாமல் இருக்கும்படி ஒரு வேண்டுதல் ஜெபத்தையும் மன்னிப்பையும் கொடுப்பதைப்பார்க்கலாம். அப்7:60
ஸ்தேவான் ஒரு "மெழுகுவர்த்தியைப்போல்" தன்னை உருக்கி பிறருக்கு இரட்சிப்பை பெற வெளிச்சத்தைக் காண்பித்தார். உயிரை தியாகம் செய்து இரத்தத்தினால் இரட்சிப்பை கொடுத்த தேவனுக்கு தன் ஜீவனையே காணிக்கையாக கொடுத்து மன்னிப்பின் வள்ளலாம் இயேசுவின் பாதசுவடுகளை பிந்தொடர்ந்தார். இயேசுவின் மரணத்தின் போது வானம் தன் சோகத்தை வெளிப்படுத்தியது. ஆனால் ஸ்தேவானின் மரணத்தின் போது வானம் திறக்கப்பட்டு இயேசுவானவர் பிதாவின் வலது பாரிசத்தில் எழுந்து நின்று தன் வீட்டிற்கு வரும் உன்னதமான அந்த விசுவாசியை வரவேற்பதற்கு ஆயத்தமானார்.
புதிய ஏற்பாட்டுக்கால கிறிஸ்தவ வாழ்வின் முதல் இரத்தசாட்சியாய் வேதாகமத்தில் காணப்படுகிறார். இயேசுக்கிறிஸ்துவுக்காக உண்மையாய் வாழ்பவர்களுக்கு எப்போதும் இயேசுக்கிறிஸ்துவின் பாதுகாப்பிருக்கும் என்பதற்கு ஸ்தேவானே அடையாளமாவார். சாதாரண விதவைகளின் கூட்டத்தை விசாரித்து ஆகாரம் கொடுப்பதற்கு அழைக்கப்பட்ட அந்த ஸ்தேவான் சிறியோர் பெரியோர், தேசத்தார் யாவருக்கும் நீதியை படிப்பிக்கும் போதக சமர்த்தனாய் மாறினார். அழைக்கப்பட்ட பாத்திரத்திற்கு இறுதிவரை நின்றவர். விசுவாசமும் பரிசுத்தாவியின் நிறைவும் அவரை
பலப்படுத்தியது. பூமியையோ, தன் சரீரத்தையோ அவர் நேசிக்கவில்லை. இயேசுவையே அவரின் நெஞ்சில் நிறுத்தினார். ஒவ்வொரு பரிசுத்தவானின் மரணமும் பூமியில் விழும் விதை என்பதை உணர்த்தியவர், இயேசுவின் வாழ்வின் வரலாற்றை படித்தவர், சரித்திர நாயகனாகிய, இயேசுவுக்காக சரித்திரமாகியவர் இன்று அப்போஸ்தலர் நடபடிக்கையில் பேசிக் கொண்டிருக்கிறார். சரித்திரத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், சரித்திர புருஷர்களாக வாழ்ந்தவர்களின் வாழ்கையை நாமும் பின்தொடர்வோம்.
(முகநூல் கிறிஸ்தவ மீடியா)
Keywords: Social Site Collections, Bible Stories.