தேவ சாயல் ஆக மாறி - Theva Saayal Aaha Maari - Tamil Christian Song Lyrics
தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும்
அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன்
பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன்
சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார்
ஆவியின் அச்சாரமீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே
காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன்
மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே
உன்னத சீயோன் மலைமேல்
எனதருமை இயேசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவீப்பேனே நீடுழியாய்