எனக்கு மட்டும் இத்தனை கிருபை
ஏன் இயேசப்பா
எனக்கு மட்டும் இத்தனை மேன்மை
ஏன் இயேசப்பா
ஏன் இயேசப்பா
எதற்கு இயேசப்பா
புரியல இயேசப்பா
புரிஞ்சும் வாழல இயேசப்பா
1.யோசேப்பை போல நானும்
இல்ல இயேசப்பா
தானியல் போல நானும்
இல்ல இயேசப்பா
ஆனாலும் உன் கிருபை
என் மேல வந்ததினால்
உமக்கு உகந்த பாத்திரமாய்
மாற்றினீரையா
உமக்குள் வாழும் கிருபையை
எனக்குள் ஊற்றினிறையா
2.ஜெப ஆவி என் மேல
இல்ல இயேசப்பா
துதியின் ஆவி என் மேல
இல்ல இயேசப்பா
ஆனாலும் உன் கிருபை
என் மேல வந்ததினால்
துதிக்க ஜெபிக்க வைத்து
என்னை அழகு பார்க்கிறீர்
துதிக்கும்போது உந்தன்
மகிமை விளங்க செய்கிறீர்
3.அன்னாள போல நானும்
இல்ல இயேசப்பா
ஆகார போல நானும்
இல்ல இயேசப்பா
ஆனாலும் உம் கிருபை
என் மேல வந்ததினால்
அற்பமான அழுகை கூட
அர்த்தமானதே
அனுதினமும் உந்தன்
தயவை பாட செய்தது
இனி வாழுவேன் இயேசப்பா
உமக்காய் ஜீவிப்பேன் இயேசப்பா
உம்மைப் போற்றுவேன் இயேசப்பா
உம்மை உயர்த்துவேன் இயேசப்பா
Tanglish
[keywords] Ithna Kiruba - இத்தன கிருபை, Raja, Iththana Kirubai, Ennaku Mattum Iththana Kirubai, Ennaku Mattum Ethana Kirubai, Tamil Christian Song.
