என் இயேசுவே என் தேவனே
உந்தன் நாமம் எனக்கு போதுமே
என் இயேசுவே என் ஜீவனே
உந்தன் வார்த்தை மதுரமாகுமே
இன்றும் என்றும் போற்றிப் பாடி ஆராதிப்பேன்
என்றும் உம்மை வாழ்த்திப்பாடி ஆராதிப்பேன்
1. மனங்கசந்தழுதிட்ட நேரம்
உள்ளம் உடைந்து நொறுங்கிட்ட நேரம்
கர்த்தர் தம் வார்த்தையினாலே
என்னை மார்போடு அனைத்திட்டாரே
உந்தன் பாதம் உந்தன்
வார்த்தை தேற்றிடுதே
உந்தன் நாமம் சொல்ல
உள்ளம் களிக்கூருதே
2. பலத்தினால் அல்ல பராக்கிரமுமல்ல
ஆவியினால் எல்லாம் ஆகும் என்றீர்
ஜீவனுள்ள தேவனாலே
கூடாதது ஒன்றும் இல்லையே
அதிசயம் அற்புதங்கள் செய்பவரே
அதிசயமாய் என்னை நடத்திடுமே
Tanglish
[keywords] En Yesuve - என் இயேசுவே, Enoch Kaviraj, Joel Thomasraj, En Yesuvae, En Yeshuve, En Yeshuvae, Tamil Christian Song.
