Kangalai Pathiya Vaippom - கண்களை பதிய வைப்போம்

Kangalai Pathiya Vaippom - கண்களை பதிய வைப்போம்


Scale: D Major - 2/4


கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன் செல்லுவோம்

சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறி தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்

இழிவை எண்ணாமலே
சிலுவையை சுமந்தாரே
வல்லவர் அரியணையின்
வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்

தமக்கு வந்த எதிர்ப்பை
தாங்கி கொண்ட அவரை
சிந்தையில் நிறுத்திடுவோம்
மனம் சோர்ந்து போக மாட்டோம்

ஓட்டத்தை தொடங்கினவர்
தொடர்ந்து நடத்திடுவார் (நம்)
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு

தடைகள் நீக்கும் இயேசு
நமக்கு முன் செல்கிறார்
தடை செய்யும் கற்களெல்லாம்
முன்னேறும் படிகளாகும்


Song Description: Tamil Christian Song Lyrics, Kangalai Pathiya Vaippom, கண்களை பதிய வைப்போம்.
KeyWords:  Jebathotta Jeyageethangal Vol - 32, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, jebathotta jeyageethangal songs lyrics, kangalai pathiya vaipom songs, kangalai pathiya vaipom songs lyrics.

Please Pray For Our Nation For More.
I Will Pray