அமர்ந்திருப்போம் காத்திருப்போம்
கர்த்தரின் வார்த்தை நிறைவேறுமே
காற்றையும் காணவில்லை மழையையும் பார்க்கவில்லை
ஆனாலும் வாய்க்கால் எல்லாம் நிரம்பிடுமே
சொன்னதை செய்திடுவார் செய்வதை சொல்லிடுவார்
சொன்னதை செய்யும் வரை கைவிடவே மாட்டார்
அற்புதம் நடக்கும் அதிசயம் நடக்கும்
நம்பிக்கை வீண் போகாது
1. யாக்கோபின் தேவன் முன்னே கடல் கண்டு விலகி ஓடும்
பரிசுத்த தேவன் முன்னே யோர்தானும் பின்னே ஓடும்
மலைகளும் பர்வதமெல்லாம் மெழுகு போல் உருகி ஓடும்
கர்த்தரின் பிரசன்னத்தால் எல்லாமே உருகி ஓடும்
புது வழி திறக்குமே அற்புதம் நடக்குமே
நம்பிக்கை வீண் போகாது
2. சத்துருவின் பிடரிகள் எல்லாம் நம் கையில் ஒப்புக்கொடுப்பார்
எல்லோரும் காலில் விழுவார் திரும்பவும் எழும்ப மாட்டாரே
தூளாக இடித்திடுவோம் சேற்றை போல் மாற்றிடுவோம்
வீதி எல்லாம் எரிந்திடுவோம் கர்த்தர் நாமம் உயர்த்திடுவோம்
சேனைக்குள் பாய்ந்திடுவோம் மதிலை தாண்டிடுவோம்
நம்பிக்கை வீண் போகாது
3. அனுகூல வாசல்கள் எல்லாம் நிச்சயமாய் திறந்திடுவாரே
தேசத்தின் கதவுகள் எல்லாம் தானாக திறந்திடுமே
பெரிய பர்வதமெல்லாம் சமபூமி ஆகிடுமே
சிங்கத்தின் மேல் நடந்து சர்பத்தை மிதித்திடுவோம்
பலவானின் வில்லை உடைப்பார் நம்மையும் தூக்கி எடுப்பார்
நம்பிக்கை வீண் போகாது
Tanglish
[keywords] Amarnthiruppom - அமர்ந்திருப்போம், Lucasekar, Amarnthirupom, Amarntheruppom, Amarntherupom, Tamil Christian Song.
