கண்களை நான் மூடி உம்மைப் பார்க்கும்போது
என் கண்ணீர் கவலை எல்லாம் எங்கோ மறைந்திடுதே
கைகளை நான் உயர்த்தி ஆராதிக்கும்போது
என் பார சுமைகள் எல்லாம் எங்கோ பறந்திடுதே
ஆராதனை இயேசையா
1. என் பெலவீனம் அதில்
உம் பெலன் நிறைவாய் தருகின்றீர்
என்னால் முடியாது என்றால்
கிருபை போதும் என்கின்றீர்
விடாய்த்த என் ஆத்துமாவைத் திருப்தியாக்குகிறீர்
உலர்ந்த என் எலும்புகளை நினமுள்ளதுமாக்குகிறீர்
உம்மைப் பாடாமல் யாரைப் பாடுவேன்
2. என் காயங்கள் அது
கொடிதாய் இருந்தும் ஆற்றுகிறீர்
என் தனிமையிலே ஏற்ற
துணையாய் நீரே இருக்கின்றீர்
வறண்ட வனாந்திரத்தில் என்னை காண்கின்றீர்
எல்ரோயீ மனமிறங்கி மறுவாழ்வு தருகின்றீர்
உங்க கிருபையினால் தானே வாழ்கிறேன்
Tanglish
[keywords] Kangalai Naan Moodi - கண்களை நான் மூடி, John Paul, Kankalai Naan Moodi, Kangalai Nan Moodi, Tamil Christian Song.
